Ban EVM செயல்பாடுகள்

2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டில் EVM-க்கு எதிராக பல கட்ட பிரச்சாரத்தை நடத்தினோம். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது. EVM-க்கு எதிராக இராமநாதபுரம் மாவட்டத்தில் பைக் பிரச்சாரம் செய்த போது பிஜேபி குண்டர்கள் எங்கள் பைக் மீது காரை இடித்து என்னையும் அப்பாவையும் கீழே தள்ளிவிட்டு அப்பாவின் கழுத்தை நெறித்து கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டார்கள்.

தொடர்ந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தும் பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் காட்டுமிராண்டிக் கூட்டத்தை எச்சரிக்கிறோம்-நந்தினி ஆனந்தன்..

Posted by Nandhini Anandan on Saturday 13 April 2019


EVM-க்கு எதிராக பிரச்சாரம் செய்ததற்காக அடியாட்களை ஏவிவிட்டு என் அப்பாவை தாக்கிய எச்.ராஜாவைக் கண்டித்து 15.04.19 அன்று காரைக்குடியில் எச்.ராஜா வீட்டின் முன்பு போராட்டம் நடத்தி கைதானபோது..

Posted by Nandhini Anandan on Tuesday 16 April 2019


2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக EVM-க்கு எதிராக நாங்கள் நடத்திய ஆன்லைன் கையெழுத்து இயக்கத்தில் 2,50,000 பேருக்கு மேல் கையெழுத்திட்டனர்‌.

EVM-ஐ தடை செய்து வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தக்கோரி இணையத்தில் நாம் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் இதுவரை...

Posted by Nandhini Anandan on Wednesday 3 March 2021


"2024 தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க வேண்டும் என்றால், EVM ஓட்டு எந்திரம் தடை செய்யப்பட வேண்டும், வாக்குச்சீட்டில் நியாயமாக தேர்தல் நடத்த வேண்டும். அதற்காக எதிர் கட்சிகள் போராட வேண்டும்" என சென்னை நந்தம்பாக்கத்தில் துண்டுப் பிரசுரம் விநியோகித்ததற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக அரசு என்னையும் என் தங்கை நிரஞ்சனாவையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.

நந்தினி- நிரஞ்சனா 19 நாள் சிறைவாசத்துக்கு பிறகு புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை.. ____________________ " EVM ஐ...

Posted by Nandhini Anandan on Sunday 20 March 2022


பாரத் நியாய் யாத்திரை நடத்தி வந்த ராகுல் காந்தியை நேரில் சந்தித்து EVM ஓட்டு எந்திரம் தடை செய்ய போராடுமாறு வலியுறுத்த சட்டீஸ்கர் மாநிலம் ராய்கர் சென்றோம். ராகுல் காந்தி உடன் இந்தியா முழுவதும் நடைபயணத்தில் பங்கேற்றிருந்த அனைவரையும் சந்தித்தோம். சட்டீஸ்கர் மாநில முன்னாள் மந்திரியை சந்தித்தோம்‌. அவர் ராகுல் காந்தியிடமும், சச்சின் பைலட்-யிடமும் எங்கள் கோரிக்கை மனுவையும் EVM-க்கு எதிராக நாங்கள்‌ வழங்கிய ஆவணங்களையும் கொண்டு சேர்ப்பதாக உத்திரவாதம் அளித்தார்.

Posted by Nandhini Anandan on Saturday 10 February 2024


டெல்லியில் காங்கிரஸ், ‌CPIM, CPI, AAP, SDPI கட்சி தலைமை அலுவகங்களுக்கு நேரில் சென்று கட்சி தலைவர்களை சந்தித்து பேசினோம். EVM-க்கு எதிராக போராட யாரும் தயாராக இல்லை.

"EVM ஐ தடை செய்யாமல் 2024-ல் பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்த முடியாது.எனவே EVM ஐ தடை செய்து வாக்குச்சீட்டில் தேர்தல்...

Posted by Nandhini Anandan on Saturday 2 December 2023


2024 தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு EVM-க்கு எதிராக குஜராத்தில் 3 நாள் நடைபயணம் நடத்தினோம். குஜராத் மக்கள் நடைபயணத்துக்கு பெரிய அளவில் ஆதவளித்தனர். EVM-இல்லாவிட்டால் குஜராத்திலும் பாஜக செல்லாக்காசு தான் என்பதை நேரில் கண்டறிந்தோம்.

இன்று (22.02.24) EVM-க்கு எதிரான 300 கி.மீ தண்டி யாத்திரை குஜராத் சபர்மதி காந்தி ஆசிரமத்தில் இருந்து நானும் அப்பாவும்...

Posted by Nandhini Anandan on Thursday 22 February 2024


அதைத் தொடர்ந்து பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் (சம்பு பார்டரில்) போராடி வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளை அங்கு சென்று சந்தித்தோம்‌. விவசாயிகள் EVM-க்கு எதிரான போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும் என இரண்டு நாட்கள் அங்கு தங்கி போராடும் விவசாயிகளை வலியுறுத்தினோம். அவர்களும் நம்முடைய கருத்துக்களை ஏற்று பேராதரவு அளித்தனர்.

பஞ்சாப்-ஹரியானா மாநில எல்லையில் உள்ள அம்பாலாவில் (சம்பு பார்டர்) நானும் அப்பாவும் EVM- க்கு எதிரான போராட்டத்துக்காக ...

Posted by Nandhini Anandan on Tuesday 27 February 2024


அதற்கு பின் டெல்லி சென்று உச்ச‌ நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் EVM மோசடி நடப்பதற்கான ஆதரங்களை கொடுத்து EVM-க்கு தடை விதிக்க கோரினோம். EVM-ல் நடந்த 2022 தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 173 வேட்பாளர்களுக்கு 0 பூஜ்யம் வாக்கு பதிவாகியுள்ளது. இதில் 96 பேர் அதிமுக, காங்கிரஸ், CPI(M), பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள். ஆதாரங்களை காட்டிய பின்பும் உச்ச‌ நீதிமன்றம் வழக்கை விசாரிக்கவில்லை, தேர்தல் ஆணையம் தடையின்றி EVM-ல் தேர்தலை நடத்தியது.

170+ வேட்பாளர்களுக்கு 0 பூஜ்யம் வாக்கு.. EVM Source code மூலம் வாக்கு திருட்டு.. தேர்தல் ஆணையமே EVM மோசடி தேர்தலை நிறுத்து..

Posted by Nandhini Anandan on Thursday 28 March 2024


மோடி-அமித்ஷாவால் முறைகேடான வகையில் நியமனம் செய்யப்பட்டுள்ள இரண்டு தேர்தல் ஆணையர்களை ( ஞானேஷ்குமார், சுக்பிர் சிங்...

Posted by Nandhini Anandan on Wednesday 27 March 2024


முறைகேடாக 2024 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நடந்த ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல்‌களிலும் பாஜக முறைகேடாக வெற்றி பெற்றது. இப்போது‌ம் எதிர்க்கட்சிகள் EVM மோசடி குறித்து அறிக்கைகள் விடுகிறார்களே தவிர போராட மறுக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளை நம்பி பயனில்லை என்பதால் மக்களுக்காகப் போராடும் கட்சியை உருவாக்கி வருகிறோம். அதன் மூலம் EVM-க்கு எதிரான போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம்..

தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்ளில் 10 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டோம்.

2025 அக்டோபரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள பீகார் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் மூன்று நாட்கள் EVM-க்கு எதிராக பிரச்சாரம் செய்தோம். EVM-க்கு எதிராக குஜராத் மக்கள் என்ன உணர்வை வெளிபடுத்தினார்களோ, பஞ்சாப் மக்கள் என்ன உணர்வை வெளிபடுத்தினார்களோ, சட்டீஸ்கர் மக்கள் என்ன உணர்வை வெளிபடுத்தினார்களோ, அதே உணர்வை பீகார் மக்களும் வெளிபடுத்தினார்கள்.

வட மாநிலங்களில் EVM எதிர்ப்பை தீவிரப்படுத்தினால் பாஜக வை வீழ்த்த முடியும்.. பீஹார் பயண அனுபவம். -நந்தினி ஆனந்தன்...

Posted by Nandhini Anandan on Wednesday 28 May 2025


2026-ல் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் பாண்டிச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.

EVM ஐ தடை செய்திட கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தை, கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள CPI(M) தலைமை அலுவலகமான AKG சென்டருக்கு சென்று CPI(M) கட்சியின் கேரள மாநில செயலாளரும் அக்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினருமான திரு. M V. கோவிந்தன் MLA அவர்களை நேரில் சந்தித்து வழங்கினோம்.

நானும் குணாவும் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருக்கிறோம். கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை சந்திப்பதற்காக...

Posted by Nandhini Anandan on Thursday 1 May 2025


தற்போது தமிழ்நாட்டில் EVM-க்கு எதிராக பைக் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்‌.


Loading.. Please Wait..