EVM முறைகேடு-ஆதாரங்கள்

உலகில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் உட்பட 195 நாடுகளில் வாக்குச்சீட்டில் தான் தேர்தல் நடக்கிறது. ஜெர்மனி, அயர்லாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளில் EVM-ன் Software (Source Code)-ஐ பயன்படுத்தி முறைகேடு செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு அங்கு EVM-கள் தடை செய்யப்பட்டன. சமீபத்தில் இதே காரணத்தால் இந்தியாவில் இருந்து EVM-களை வாங்கி பயன்படுத்திய நம் அண்டை நாடான பங்களாதேஷில் EVM-கள் தடை செய்யப்பட்டு வாக்குச்சீட்டு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. நம் நாட்டில் EVM-ன் மூளையாக செயல்படும் மென்பொருள்/Software (Source Code)-பற்றிய விவரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. அனைத்தும் மூடு மந்திரமாகவே உள்ளன. RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய தேர்தல் ஆணையம் EVM-களின் Source Code தங்களுக்கு தெரியாது என பதில் அளித்துள்ளது. Software (Source Code)-ஐ பயன்படுத்தி ஒரு வேட்பாளருக்கு விழும் வாக்குகளை வேறு ஒரு வேட்பாளருக்கு மாற்ற முடியும். இந்த முறையிலேயே நம் நாட்டில் EVM முறைகேடுகள் நடக்கின்றன. Software (Source Code)-ஐ பயன்படுத்தி EVM-ல் மோசடி செய்ய முடியும் என்பதை நாங்கள் உருவாக்கியுள்ள மாடல் EVM மெஷின் மூலம் டெமோ செய்து காட்டியுள்ளோம்.


இக்காணொளியில் EVM-ல் 500 வகையில் மோசடி செய்ய முடியும் என்பதை.. மாதிரி EVM மூலம் ஹிந்தி மொழியில் டெமோ செய்து காட்டியுள்ளோம் (தமிழ் சப் டைட்டில் உள்ளது) விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள பீஹார் உட்பட வட மாநிலங்களில் உள்ள எதிர்கட்சியினருக்கு இந்த ஹிந்தி Demo காணொளியை அனுப்பி வருகிறோம். -நந்தினி ஆனந்தன் ஒருங்கிணைப்பாளர் மக்களுக்காகப் போராடும் கட்சி www.banevm.org இணையதளம் மூலம் மக்களுக்காகப் போராடும் கட்சியில் இணைவீர்.

Posted by Nandhini Anandan on Sunday 27 April 2025


EVM வாக்கு எந்திரத்தில் மோசடி செய்து மக்களின் ஓட்டுகளை திருட முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. EVM மோசடி வடநாட்டில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் தொடர்ந்து நடக்கிறது. பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என EVM-ஐ பயன்படுத்தி நடக்கும் எல்லா தேர்தல்களிலும் EVM மோசடி நடக்கிறது. இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. உதாரணமாக கடந்த 2022-பிப்ரவரியில் தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரும் அளவில் EVM ஓட்டு திருட்டு நடந்துள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இத்தேர்தலை நடத்தியது. இந்த தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் போட்டியிட்ட வேட்பாளர்களில் 173 வேட்பாளர்களுக்கு EVM எந்திரத்தில் 0(பூஜ்யம்) வாக்கு பதிவாகியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 வேட்பாளர்களுக்கு பூஜ்யம் வாக்கு பதிவாகியுள்ளது. இந்த ஆதாரங்களை சுப்ரீம் கோர்ட் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் நேரடியாக கொடுத்துள்ளோம். அந்த விவரங்களை பின்வருமாறு அளித்துள்ளோம்.

வேட்பாளர்களுக்கு 0 வாக்கு பதிவாகியுள்ளது எப்படி? இந்த வேட்பாளர்கள் தங்கள் ஓட்டை தங்களுக்கு போட்டிருக்க மாட்டார்களா? இவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், இவர்கள் சார்ந்த கட்சியினர் இந்த வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டிருக்க மாட்டார்களா? இந்த ஓட்டுகள் எல்லாம் மாயமானது எப்படி? இப்படி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. இதற்கு தேர்தல் ஆணையம் எந்த பதிலும் சொல்ல மறுக்கிறது. கன்னியாகுமரி மட்டுமல்ல அரியலூர், செங்கல்பட்டு, கோவை, கடலூர், திண்டுக்கல், தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தேனி, தென்காசி, திருவள்ளூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருச்சி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருவாரூர், விருதுநகர், விழுப்புரம் என 33 மாவட்டங்களில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இவ்வாறு 0 வாக்கு பதிவாகியுள்ளது. இவ்வாறு 0 வாக்கு பதிவாகியுள்ள வேட்பாளர்களில்.. அதிமுக-3, அமமுக-34, நாம் தமிழர்-22, பாமக-14, தேமுதிக-8, பாஜக-6, காங்கிரஸ்-2, மநீம-2, சமக-2, மதிமுக-1, CPI(M)-1, CPI(ML)Liberation-1 ஆகிய அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் 96 பேர். இவர்கள் தவிர 77 சுயேச்சை வேட்பாளர்களுக்கும் 0 பூஜ்யம் வாக்கு பதிவாகியுள்ளது. நகர்ப்புற வார்டு தேர்தலிலேயே EVM எந்திரத்தில் இப்படி ஓட்டுகளை திருடுகிறார்கள் என்றால் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் எந்த அளவுக்கு திருடுவார்கள்? இப்படி மக்களின் ஓட்டுரிமையை மெஷின் மூலம் மோசடியாக திருடுவதை எப்படி ஏற்க முடியும்? மக்களின் ஓட்டுரிமையே பறிபோய்விட்டால் வேறு என்ன உரிமை மிஞ்சும்? EVM-ஐ தடை செய்து வாக்குச்சீட்டில் நியாயமாக தேர்தல் நடந்து உண்மையிலேயே மக்கள் ஆதரவு பெற்ற பிரதிநிதிகள் அதிகாரத்துக்கு வந்தால் மட்டுமே நாட்டில் மக்களுக்கான ஆட்சி உருவாகும்.


Loading.. Please Wait..

#BanEVM_SaveDemocracy #BanEvmSaveIndia #BanEVM #ModiAfraidOfBallotPaper ஏன் EVM ஐ தடை செய்ய வேண்டும் ? EVM ஐ பயன்படுத்தி பின்னர் தடை செய்த ஜெர்மனி,பங்களாதேஷ் போன்ற நாடுகளின் அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விபரங்கள் அடங்கிய 76 பக்க ஆவணம்.. ஆவணத்தை படிக்க- https://drive.google.com/…/18QDs03rSxsLUXQH5hM1qLy1_3…/view… *(Updated Document)

Posted by Nandhini Anandan on Saturday 6 January 2024


தமிழ்நாட்டில் 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் EVM- ல் 170+ வேட்பாளர்களுக்கு 0 வாக்கு பதிவானது எப்படி? EVM- ல்...

Posted by Nandhini Anandan on Tuesday 26 March 2024


புல்வாமா தாக்குதலில் 40 CRPF வீரர்கள் பலியான சம்பவத்தில் பிரதமர் மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து NIA- (தேசிய புலனாய்வு...

Posted by Nandhini Anandan on Saturday 28 October 2023


தமிழ்நாட்டில் 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் EVM- ல் 173 வேட்பாளர்களுக்கு 0 (பூஜ்யம்) வாக்கு பதிவானது எப்படி?...

Posted by Nandhini Anandan on Thursday 4 April 2024


தமிழ்நாட்டில் 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் EVM-ல் 173 வேட்பாளர்களுக்கு 0 ( பூஜ்யம்) வாக்கு பதிவானது...

Posted by Nandhini Anandan on Sunday 21 April 2024


EVM-தேர்தல் மோசடியானது என்பதற்கான ஆதாரங்கள்.(பகுதி-1) 2019 பாராளுமன்றத் தேர்தல் மோசடி மே 23, 2019 1) லோக் சபா தேர்தலில்...

Posted by Nandhini Anandan on Thursday 28 November 2019


EVM தேர்தல் மோசடியானது என்பதற்கான ஆதாரங்கள்(பகுதி-2) பகுதி-1 படிக்க :...

Posted by Nandhini Anandan on Thursday 28 November 2019


"EVM-ஐ தடை செய்து வாக்குச்சீட்டில் பாராளுமன்றத் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்'' "புல்வாமாவில் 40 CRPF வீரர்கள்...

Posted by Nandhini Anandan on Friday 15 March 2024


காங்கிரஸ் ஆட்சியில் EVM-ஐ எதிர்த்த BJP இப்போது EVM-ஐ ஆதரிப்பது ஏன்? "வாக்குப்பதிவு எந்திரத்தின் மூளையாக இருப்பது மைக்ரோ கன்ட்ரோலர் சிப் (Micro Controller Chip).இந்த சிப்பை தயாரிப்பது ஒரு ஜப்பான் நிறுவனம். இந்த எந்திரங்களை ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரானிக் கார்ப்பரேசன் ஆப் இந்தியா வாங்கி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கொடுக்கிறது. இந்த ஜப்பான் நிறுவனத்தை அணுகி, 'நீங்கள் ஜப்பானில் தேர்தலுக்கு இதே சிப்பை பயன்படுத்துகிறீர்களா ?' என கேட்டேன். அதற்கு , 'நீங்கள் என்ன முட்டாளா ?, நாங்கள் வாக்கு எந்திரங்களை எக்காலத்திலும் தொட மாட்டோம். வாக்குச் சீட்டில் தான் தேர்தல் நடத்துகிறோம்' என்றனர். ஜப்பானைப் போல இங்கிலாந்திலும் வாக்கு சீட்டு முறையை தான் பின்பற்றுகின்றனர் அதே போல ஜெர்மனியிலும் வாக்கு எந்திரத்துக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. " -சுப்பிரமணியன் சாமி, பாஜக MP

Posted by Nandhini Anandan on Monday 18 March 2019


பாசிசத்தை அதிகாரத்தில் இருந்து வீழ்த்த வேண்டுமென்றால் ஓட்டு மெஷின் மோசடிக்கு எதிராகப் போராட வேண்டும்.. ஓட்டு மெஷின் மோசடி மூலம் தான் பாசிச பாஜக-RSS கும்பல் தொடர்ந்து அதிகாரத்தில் நீடிக்கிறது. இந்த மோசடிக்கு எதிராகப் போராடாமல் பாசிசத்தை எதிர்ப்பதாக பலர் பாசாங்கு செய்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்..

Posted by Nandhini Anandan on Monday 11 December 2023


Posted by Nandhini Anandan on Monday 11 December 2023


Posted by Nandhini Anandan on Tuesday 12 December 2023


செயற்கையாக கட்டமைக்கப்பட்ட மோடியின் பிம்பம் நொறுங்குகிறது..

Posted by Nandhini Anandan on Friday 29 December 2023


Posted by Nandhini Anandan on Saturday 30 December 2023


EVM மோசடி தேர்தல்..

Posted by Nandhini Anandan on Tuesday 23 April 2024


EVM மட்டுமல்ல VVPAT இயந்திரமும் நம்பகத்தன்மை அற்றது. ஒப்புகை சீட்டில் நம்மிடம் 7 வினாடிகள் நாம் வாக்களிக்கும் சின்னத்தை காட்டிவிட்டு பெட்டிக்குள் வேறு ஒரு சின்னத்தை VVPAT இயந்திரத்தால் மாற்றி பிரிண்ட் செய்ய முடியும் என்பதை சமீபத்தில் டெல்லியில் கணிணி பொறியாளர்கள் செயல்முறை விளக்கம் மூலம் செய்து காட்டினர். பல கோடி மக்கள் ஹிந்தியில் பார்த்துள்ள இந்த செயல்முறை விளக்க வீடியோ தமிழ் சப்டைட்டிலுடன்.. அவசியம் பாருங்கள்

Posted by Nandhini Anandan on Monday 4 March 2024


#ModiAfraidOfBallotPaper #BanEVM_SaveDemocracy #Ban_EVM #BanEvmSaveIndia #BanEVM

Posted by Nandhini Anandan on Wednesday 31 January 2024