EVM-ஐ ஒழிக்க மக்களுக்காகப் போராடும் கட்சியில் இணைவீர்.

விருப்பப் படிவம் கீழே உள்ளது


"மக்களுக்காகப் போராடும் கட்சி"- என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளோம். EVM ஐ ஒழித்து இந்திய மக்களின் ஓட்டுரிமையை மீட்பதே இக்கட்சியின் முதன்மையான நோக்கம். EVM மோசடி தேர்தல் மூலம் மத்தியில் நிரந்தரமாக தங்களது ஆட்சியை நிலைநாட்டி ஒவ்வொரு மாநிலமாக EVM மோசடி மூலம் பாசிச RSS- பாஜக கைப்பற்றி வருகிறது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் பாஜக வின் EVM மோசடி தொடர்பாக பல்வேறு ஆதாரங்கள் வெளிவருகின்றன. ஆனால் அதைப்பற்றி சில நாட்கள் பேசிவிட்டு EVM ஐ ஒழிக்க உறுதியாக எந்த போராட்டமும் நடத்தாமல் கடந்து செல்வதையே எதிர்க்கட்சிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

EVM க்கு எதிராகப் போராட கோடிக்கணக்கான இந்திய மக்கள் தயாராக இருந்தாலும் மக்களை ஒருங்கிணைத்து மக்களுக்குத் தலைமை தாங்கிப் போராட ஒரு வலிமையான கட்சி இல்லை. எந்தக் கட்சியும் இதற்கு தயாராக இல்லாத சூழ்நிலையில் EVM-க்கு எதிராக தொடர்ந்து போராட மக்களில் இருந்தே ஒரு கட்சியை உருவாக்க முயற்சி எடுத்து வருகிறோம்.

இதற்காகத்தான் "மக்களுக்காகப் போராடும் கட்சி" என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கி வருகிறோம்.

இக்கட்சியை முதலில் தமிழ்நாட்டில் தொடங்கி பின்பு அகில இந்திய கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.

மக்களுக்காகப் போராடும் கட்சியின் முக்கியமான கொள்கைகள்:

1. மக்கள் அனைவருக்கும் அரசியல் சுதந்திரம் வேண்டும் (Political Independence). அதற்கு EVM வாக்கு எந்திரத்தை தடை செய்து வாக்குச்சீட்டு முறையில் நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும்.

2. MP, MLA-க்கள் நேர்மையானவர்களாக, மக்களின் நலன், நாட்டின் நலன் பற்றியே எந்நேரமும் சிந்திக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். முக்கியமாக தனக்கென சொத்து சேர்க்கும் ஆசை இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நாட்டில் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டு நேர்மையான ஆட்சி நடைபெறும். எனவே சொத்து சேர்க்கும் ஆசை இல்லாதவர்கள் மட்டுமே MP, MLA ஆக முடியும் என்ற விதத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

3. மக்கள் அனைவருக்கும் பொருளாதார சுதந்திரம் வேண்டும் (Economic Independence). இதற்கு 'மக்கள் உடைமை பொருளாதாரக் கொள்கை' நடைமுறைப்படுத்தப்பட்டு அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் உருவாக்கித் தரவேண்டும்.

நம் நாட்டில் ஒரு சிலரிடம் மிகப்பெரும் அளவுக்கு செல்வம் குவிந்துள்ளது. ஆனால் மிகப் பெரும்பாலான மக்கள் பொருளாதாரத்தில் அடிமை நிலையில் தான் உள்ளனர். பொருளாதார பலம் உள்ளவர்களிடமே ஆட்சி அதிகாரம் இருப்பதால் அரசின் கொள்கைகள் அனைத்தும் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களுக்கே சாதகமாக தனி உடைமைக் கொள்கையை ஊக்குவிப்பதாக இருக்கிறது. இது மக்களை மேலும் மேலும் பொருளாதார அடிமைத்தனத்தில் தள்ளுகிறது. இந்த நிலை போக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் பொருளாதாரத்தில் நியாயமான பங்கும், வேலைவாய்ப்புகளும், தொழில் வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும். இதற்கு மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய மக்கள் உடைமை பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

4. சாதி, மதம் போன்ற பிரிவினைகள் இன்றி மனிதன் 'மனிதனாக' வாழும் ஒற்றுமையான இந்தியாவை உருவாக்க வேண்டும்.

5. போதை என்ற தீமையானது பல தீமைகளுக்கும் குற்றங்களுக்கும் மூல காரணமாக உள்ளது. எனவே டாஸ்மாக் மது, கஞ்சா உட்பட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து விதமான போதைப் பொருட்களையும் தடை செய்ய வேண்டும்.

6. 'வளர்ச்சி' என்ற பெயரில் இயற்கை வளங்கள் வரைமுறையின்றி சூறையாடுவது தடுத்து நிறுத்தப்பட்டு நாட்டின் இயற்கை வளங்களையும் விவசாயத்தையும் முறையாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அவற்றை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்.

இந்த 6 கொள்கைகளையும் செயல்படுத்தினாலே மக்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படுத்தி நாட்டில் மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழும் சூழ்நிலையை உருவாக்கி விடலாம். இக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு இக்கட்சியில் உறுப்பினராக இணைய விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்து தங்களது ஒப்புதலை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கட்சியில் இணைய விருப்பம் தெரிவிப்பவர்களின் கூட்டம் விரைவில் நடைபெறும். அக்கூட்டத்தில் கட்சியின் விதிமுறைகள், நிர்வாகிகள் மற்றும் முழுமையான கொள்கைகள் இறுதி செய்யப்படும். ஒரு கட்சியாக இயங்க தேவையான அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கிய பின் கட்சி பதிவு செய்யப்பட்டு செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.

இப்படிக்கு,
நந்தினி ஆனந்தன்,
ஒருங்கிணைப்பாளர்,
மக்களுக்காகப் போராடும் கட்சி

Valid.
Enter your Name
Valid.
Enter your Mobile Number
Select your District

இது வரை 1890 பேர் பதிவு செய்துள்ளனர்.