EVM முறைகேடு-2024 கோவை பாராளுமன்ற தொகுதி


2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி கோவை, மதுரை உட்பட 12 மக்களவைத் தொகுதிகளில் அதிமுக-வை முந்தி இரண்டாம் இடம் பிடித்ததாக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் முடிவுகளை நியாயமாக ஆய்வு செய்தால் பாஜக வுக்கு சாதகமாக மிகப்பெரிய அளவில் EVM ஓட்டு திருட்டு நடந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். பாரம்பரியமாக அதிமுக வலுவாக உள்ள கோவை பாராளுமன்றத் தொகுதியில் 272 பூத்களில் மிகக் குறைந்த அளவில், பதிவான வாக்குகளில் 10% க்கும் குறைவான வாக்குகளைப் அதிமுக பெற்றுள்ளது. சில பூத்களில் அதிமுக ஒற்றை இலக்கத்தில் வாக்குகள் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பாஜக அந்த பூத்களில் 30% முதல் 70% வாக்குகள் வரை பெற்றுள்ளது. இரட்டை இலை சின்னத்தைத் தவிர வேறு சின்னத்துக்கு வாக்களிக்காத வாக்காளர்கள் ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது 100 பேராவது இருப்பார்கள். இது தமிழ்நாடு முழுவதும் உள்ள நிலை. கோவை, மதுரை போன்ற பகுதிகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். ஆனால் 2024 பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலைக்கு விழுந்த வாக்குகள் EVM மோசடி மூலம் தாமரைக்கு மாற்றப்பட்டுள்ளது.



கோவையில் அதிமுக மிகக் குறைந்த அளவில் வாக்குகளைப் பெற்ற 272 பூத்களின் விவரம் பின்வருமாறு:
[Source: https://www.elections.tn.gov.in/GELS2024_Form20.aspx]
[கோவையின் அனைத்து பூத்களின் தேர்தல் முடிவுகளை பார்க்க: FORM-20 LINK]