EVM முறைகேடு-Zero Vote


2022-பிப்ரவரியில் தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரும் அளவில் EVM ஓட்டு திருட்டு நடந்துள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இத்தேர்தலை நடத்தியது. இந்த தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் போட்டியிட்ட வேட்பாளர்களில் 173 வேட்பாளர்களுக்கு EVM எந்திரத்தில் 0(பூஜ்யம்) வாக்கு பதிவாகியுள்ளது. இவ்வாறு 0 வாக்கு பதிவாகியுள்ள வேட்பாளர்களில்.. அதிமுக-3, அமமுக-34, நாம் தமிழர்-22, பாமக-14, தேமுதிக-8, பாஜக-6, காங்கிரஸ்-2, மநீம-2, சமக-2, மதிமுக-1, CPI(M)-1, CPI(ML)Liberation-1 ஆகிய அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் 96 பேர். இவர்கள் தவிர 77 சுயேச்சை வேட்பாளர்களுக்கும் 0 பூஜ்யம் வாக்கு பதிவாகியுள்ளது. EVM எந்திரத்தில் ஓட்டுகளை திருடுகிறார்கள் என்பதற்கான முக்கியமான ஆதாரம் இது. பின்வரும் தேர்தல் முடிவுகள் '2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை' நடத்திய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணைய தளமான https://tnsec.tn.gov.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டவை.



173 பேர் பட்டியல் பின்வருமாறு: [முழு பட்டியல் தேர்தல் முடிவுகளுடன் பார்க்க: Click Here for PDF]